K. RAJESH
4y ago
Welcome to the Financial Hypermarket
#Demonitization
அந்த நாள் - நவம்பர் 8, 2016 - மணி 8
ஆத்தா, ஒரே கையெழுத்துல ஊரையே நாசம் பண்ணின மாதிரி, நம்ம ஜீ, ஒரே "மன் கி பாத்" நிகழ்ச்சியில நாட்டையே நாசம் பண்ற மாதிரி ஒரு அறிவிப்பு வெளியிட்டாரு. அடுத்த சில மணி நேரங்கள்ல, நாடெங்கும் பதட்டம், ஓலம் மற்றும் குழப்பம்.
நாலே மணி நேரத்துல இந்தியாவில் circulation ல் இருந்த 86% பணம் செல்லாக்காசு ஆனது. கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் ன்னு கம்பு சுத்திக்கிட்டே வந்த ஜீ'ய பார்த்து பணம் பதுக்கி வைத்தவர்கள் பயப்படவில்லை. அவர்களுக்கு(ம்) தெரியும், எவ்வாறேனும் கருப்பை வெள்ளையாக்கி விடலாமென்று.
Demonitization ஏன் செய்கிறோமென்று ஜீ சொன்ன காரணங்கள்:
1) கருப்பு பணம் ஒழிப்பு (Black Money)
2) கள்ளப் பணம் ஒழிப்பு (Counterfeits)
3) டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பது (Digital Transactions)
6 வருடம் கழித்து Forecasted Vs Actuals - என்னன்னு பாப்போமா?
1) கருப்பு பணம் ஒழிப்பு (Black Money)
ரிசர்வ் வங்கியின் தகவல் படி, மதிப்பிழந்த பணம் 99%, திரும்ப வங்கிகளிடம் வந்து சேர்ந்தது.
மதிப்பிழந்த பணம்: ₹15.41 லட்சம் கோடி.
திரும்ப வந்த பணம்: ₹15.31 லட்சம் கோடி
எவ்வளவு கருப்புப் பணம் மீட்கப் பட்டதென்ற கேள்விகளுக்கு அரசின் பதில்:
"We don't have that data". வாட்சப் வாயன்கள், வழக்கம்போல் "சூப்பர் ஜீ, சூப்பர் ஜீ" என்று ATM வாசலில் நின்றவண்ணம், ஜீ வாயினால் சுட்ட வடையை விற்றுக் கொண்டிருந்தனர்.
ரகுராம் ராஜன், In his book "I do what I do", இந்த திட்டத்தை தான் ஆதரிக்கவில்லையென்று தெரிவித்திருந்தார். "
"Short-term impact of the exercise could outweigh the long-term gains". அன்றைய பொருளாதார நிபுணர்கள் சொன்னது - "கருப்பு பணம், பணமாக அல்லாமல், வேறு வழிகளில் தான் பதுக்கி வைக்கப் பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் எதுவுமே செய்ய முடியாது" என்று. இதையும் கேட்கவில்லை ஜீ.
2) கள்ளப் பணம் ஒழிப்பு (Counterfeits)
ரிசர்வ் வங்கியின் மே 27 ஆம் தேதி அறிக்கையின்படி, இந்தியாவில் கள்ளப்பணம் அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை.
https://www.rbi.org.in/Scripts/AnnualReportPublications.aspx?Id=1350
2016ம் ஆண்டு, 6.32 லட்சம் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. அடுத்த நான்கு வருடங்களில் மட்டும் 18.87 லட்சம் கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன என்கிறது RBI ரிப்போர்ட். இதில் அதிக அளவில் அச்சிடப்பட்டது, ₹100 நோட்டுக்கள்.
1.7 லட்சம் - 2019-20
2.2 லட்சம் - 2018-19
2.4 லட்சம் - 2017-18
RBI தகவலின்படி, கள்ள நோட்டுக்களின் எண்ணிக்கை, கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் பொது:
₹10 நோட்டு: 144.6% அதிகரிப்பு
₹50 நோட்டு: 28.7% அதிகரிப்பு
₹200 நோட்டு: 151.2% அதிகரிப்பு
₹500 நோட்டு: 37.5% அதிகரிப்பு
3) டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பது (Digital Transactions)
"Cash is King" என்பதே நம் நாட்டின் நிதர்சனம். என்னதான் சங்கிகள் வாட்சப்பில் "பூ விக்கிறவங்க கூட இப்போ UPI மூலமா payment வாங்கிக்கிறாங்க என்று கம்பு சுத்திக் கொண்டிருந்தாலும், உண்மை நிலவரம்:
ரிசர்வ் வங்கியின் தகவல்படி, சுழற்சியிலுள்ள cash:
நவம்பர் 4, 2016: ₹17.7 லட்சம் கோடி
அக்டோபர் 21, 2022: ₹30.88 லட்சம் கோடி (71.84% increase)
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது என்பதை மறுக்க முடியாது. சென்ற மாதம் UPI பரிவர்த்தனைகள் ₹12.11 லட்சம் கோடி க்கு நடைபெற்றுள்ளது.
எண்ணிக்கை மூலம் கணக்கிட்டால், UPI பரிவர்த்தனைகள், கடந்த அக்டோபர் மாதம், 730 கோடி. UPI பரிவர்த்தனைகள் அதிகரித்ததன் காரணம்:
1) Convenience
2) லாக் டவுன் போடப்பட்டதால் மக்கள் வெளியில் செல்ல முடியாமையினால்.
ஆக, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் "இதையெல்லாம் நாங்கள் கிழிப்போம்" என்ற கூவல் அர்த்தமில்லாமல் போனது. இந்த நடவடிக்கையினால் மக்கள் துன்புற்றனரே தவிர, தேசத்திற்கு எந்தவொரு நன்மையையும் (இந்தியாவை ஆண்டுகொண்டிருப்பது பைத்தியங்கள் என்கிற உண்மையை உரைத்ததை தவிர) ஏற்படவில்லை.
இதே Demonitization 1997 வருடம் பண்ணினாங்க. பொருளாதார நிபுணர்கள் கூடி முடிவு செய்த விஷயம் எப்படி இருக்கும் தெரியுமா?
இப்படி இருக்கும்: https://twitter.com/rajeshkmoorthy/status/1364460404693368833?s=20&t=gsHcFHDlvTHmwAO7-nT_ew
குரங்குகளின் கையில் பூமாலை என்ன ஆகும்? அதை நீங்களே பார்த்து தெரிந்து கொண்டிருப்பீர்கள்.
#வாழ்கபைத்தியங்களுடன். 🙏🏼🙏🏼🙏🏼